சிலைக் கடத்தல் வழக்குகள் தொடர்பான முழுமையான ஆவணங்களை இன்னும் 2 வாரத்தில் ஒப்படைக்க வேண்டும் என, பொன் மாணிக்கவேலுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிலைக் கடத்தல் வழக்கு விவரங்கள் தொடர்பான விசாரணை அறிக்கையை சிலை கடத்தல் பிரிவு உயர் அதிகாரிகளிடம் வழங்க பொன்.மாணிக்கவேலுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் சிலைக் கடத்தல் வழக்கு தொடர்பான விவரங்களை உயரதிகாரிகளிடம் ஒப்படைக்காததால், பொன்.மாணிக்கவேல் மீது தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர், பொன்மாணிக்கவேல் சிலைக் கடத்தல் வழக்குத் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தமிழக அரசிடம் ஒப்படைக்கவில்லை என வாதிட்டார். இதையடுத்து சிலைக் கடத்தல் தொடர்பான மீதமுள்ள ஆவணங்களை பொன்.மாணிக்கவேல் இன்னும் இரண்டு வாரங்களில் தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
Discussion about this post