ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 50 சதவீதம் ஒப்புகைச் சீட்டுகளை சரி பார்க்க வேண்டும் என்று, எதிர்க்கட்சிகள் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் உட்பட 21 எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன. தேர்தலில் நம்பகத் தன்மையை உறுதி செய்யும் விதமாக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 50 சதவீத ஒப்புகை சீட்டுகளை சரி பார்க்க வேண்டும் என்று கூறியிருந்தன. இந்த வழக்கு தொடர்பாக தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவில் 50 சதவீதம் ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டுமானல் தேர்தல் முடிவுகளை வெளியிட 6 நாட்கள் தாமதமாகும் என்று கூறியிருந்தது.
மேலும் ஒப்புகை சீட்டுகளை எண்ணுவதற்கு தேர்தல் அதிகாரிகளுக்கு கூடுதல் பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில் இன்று இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு வழக்கை தள்ளுபடி செய்து உத்தர விட்டது. 5 சதவீத ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Discussion about this post