பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கை, சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. .
நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக பாட்னா காவல்துறை தன் மீது பதிவு செய்துள்ள வழக்கை, மும்பைக்கு மாற்றக் கோரி சுஷாந்தின் காதலியும், நடிகையுமான ரியா தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஹ்ருஷிகேஷ் ராய், சுஷாந்த் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க அனுமதி அளித்தார். இந்த வழக்கில் மும்பை காவல்துறை சிபிஐக்கு அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என்றும், ஆவணங்களை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடும் அதிகாரம் பீகார் அரசுக்கு உள்ளதாக தெரிவித்த நீதிபதி, வழக்கை பாட்னாவில் இருந்து மும்பைக்கு மாற்ற கோரிய நடிகை ரியாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
நடிகர் சுஷாந்த் மரண வழக்கை பீகார் மாநில அரசு அண்மையில் சிபிஐயிடம் ஒப்படைத்தது. எனினும், இதற்கு மும்பை காவல்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post