இந்திய விமானப் படைக்கு சொந்தமான எஸ்.யூ. 30 ரக விமானம் அசாமில் விபத்துக்குள்ளானது.
தேஷ்பூர் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, எஸ்.யூ. 30 ரக விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த விமானிகள் இருவரும் பத்திரமாக வெளியேறியதால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து குறித்து ஆய்வு செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்னதாக விமானத்தின் எஞ்ஜினில் கோளாறு ஏற்பட்டதாக விமானிகள் தகவல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்தாண்டு மட்டும் விமான படைக்கு சொந்தமான 11 விமானங்கள் விபத்திற்குள்ளாகி உள்ளதாக பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த 2014ம் ஆண்டு முதல் விமானப் படை வீரர்கள் 46 பேர் விமான விபத்தில் வீர மரணமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.