ரவுடி பேபி சூர்யா தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏன் இந்த முடிவு? திருப்பூர் மாவட்டம் அய்யம்பாளையம் அருகே உள்ள சபரி நகரைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி. இவர் சமூக வலைதளமான டிக்டாக்கில் சூர்யா என்ற பெயரில் மிகவும் பிரபலமானவர். இவரது அத்துமீறிய வீடியோக்களால் ரவுடி பேபி சூர்யா என அழைக்கப்பட்டார். கடந்த 14ஆம் தேதி சிங்கப்பூரில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு வந்த சூர்யாவுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு 16ம் தேதி திருப்பூர் வந்தடைந்தார். சிங்கப்பூரில் இருந்து சூர்யா வந்ததால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் சுகாதாரத்துறைக்கு தகவல் அளிக்கவே, அவர்கள் சூர்யாவுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்தனர். மேலும், அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர் எனவும் நோட்டீஸ் ஒட்டி சென்றனர். அப்போது போலீசாருக்கு ஒத்துழைப்பு தர மறுத்து இவர் செய்த அலப்பறைகள் சமூக வலைதளங்களில் வைரலாகின.. தனக்கு மருத்துவமனையில் தனி அறை வேண்டும், ஏசி வசதி வேண்டும் இவர் வைத்த கோரிக்கைகளால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் ஒருவழியாக இவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.. இந்நிலையில் சூர்யா இன்று அதிகாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மீட்கப்பட்ட சூர்யா கொரோனா தனிமைபடுத்தும் வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், பிறருடன் அவர் செல்போனில் பேசி வருவதாகவும் மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. டிக்டாக்கில் தன்னை எவ்வளவு தான் விமர்சித்தாலும், அதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல், தன் போக்கில் வீடியோ வெளியிட்டு வந்தார் சூர்யா. தன்னை ஒரு தைரியமான பெண்ணாக காட்டிக்கொள்ளும் சூர்யாவின் இந்த கோழைத்தனமான முடிவால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
Discussion about this post