அண்ட்ராய்டு கேம் விளையாட கூடாது என பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த சிறுவன் தற்கொலை செய்துகொண்டான் …
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பெத்தகண்டியாலா மண்டலம் கோராடா கிராமத்தை சேர்ந்தவர்கள் வெங்கட்ரமணா த்ரிவேணி தம்பதியர்கள். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.
இதில் மூத்த மகனான லோகித் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். மகன் கேட்டதையேல்லாம் வாங்கிகொடுத்த பெற்றோர்கள் லோகித்துக்கு சில மாதங்கள் முன்பு ஆண்ட்ராய்டு போன் ஒன்றையும் வாங்கிகொடுத்துள்ளனர், இதனைதொடர்ந்து லோகித் ஆண்ட்ராய்டு போனில் பப்ஜி என்ற இணையதள விளையாட்டை பதிவிறக்கம் செய்து விளையாட தொடங்கியுள்ளார்…
பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான லோகித் பள்ளிக்கு செல்வதை தவிர்த்து வந்துள்ளார் , இதனை அறிந்த பெற்றோர்கள் லோகித்தை கண்டித்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த லோகித் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை கரைத்து குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
பப்ஜி விளையாட்டு இளம் தலைமுறையை அடிமைப்படுத்தி வருவதாக தெரிவித்த பெற்றோர்கள் இந்த விளையாட்டுக்கு அரசு தடை விதிக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.
Discussion about this post