திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே முகாமிட்டுள்ள சின்னத்தம்பி யானை, சில தினங்களாக கரும்பு பயிர்களை சேதப்படுத்தி வருவதால், யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கரும்பு விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை பின்புறம் உள்ள புதர் பகுதியில், சின்னத்தம்பி யானை கடந்த சில தினங்களாக தஞ்சம் புகுந்துள்ளது. புதரில் இருந்து வெளியில் வரும் சின்னத்தம்பி, அருகில் உள்ள கரும்பு தோட்டங்களில் புகுந்து கரும்புப் பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது. இதனால் கவலையடைந்துள்ள விவசாயிகள், யானையை உடனடியாக வனப்பகுதிக்குள் விரட்ட உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே, கலிம் என்ற கும்கி யானையின் உதவியுடன் சர்க்கரை ஆலையின் கரும்பு தோட்டத்திற்கு எதிர்ப்புறம் சின்னத்தம்பி விரட்டப்பட்டுள்ளதாக அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குநர் தெரிவித்தார்.
Discussion about this post