தேனி மாவட்டம் சின்னமனூர் சுற்றுவட்டார பகுதிகளில் செங்கரும்பு விளைச்சல் அதிகரித்துள்ளதால், இந்தாண்டு பொங்கலை உற்சாகமாக கொண்டாட இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டம் சின்னமனூர், மார்க்கையன்கோட்டை, சீலையம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் செங்கரும்பு பயிரிடப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் இப்பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டனர். பாசன வசதிக்காக முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. சமீபத்தில் பெய்த மழையால் செங்கரும்புகள் 8 அடிவரை வளர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன.
ஏக்கருக்கு 2 லட்சம் ரூபாய் செலவு செய்ததாக கூறும் விவசாயிகள், நல்ல விளைச்சலை கண்டுள்ளதால், ஒரு கட்டு கரும்பு 200 ரூபாய் வரை விற்பதாக தெரிவித்தனர். இதனால், இந்த ஆண்டு பொங்கலை உற்சாகமாக கொண்டாட உள்ளதாகவும் விவசாயிகள் மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளனர்.
Discussion about this post