ஒசூர் அருகே தனியார் சொகுசுப் பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்தது சம்பவத்தில் ஓட்டுநர் உடனடியாக செயல்பட்டதால் பேருந்தில் இருந்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பெங்களூரில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு திருப்பூர் நோக்கி சென்றுக் கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து, ஒசூரை அடுத்த சூளகிரியின் சின்னார் பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதிகாலையில் ஏற்பட்ட இந்த சம்பவம் குறித்து பின்னால் வந்த பயணிகள் கொடுத்த தகவலையடுத்து, பேருந்தை உடனடியாக ஓட்டுநர் நிறுத்தினார்.
தொடர்ந்து பேருந்தில் இருந்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் வேகமாக இறக்கப்பட்டனர். இதனால் பெரியளவில் நடைபெறவிருந்த அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து தீப்பிடித்து எரிந்த பேருந்தை, அங்குவந்த தீயணைப்புத்துறையினர் அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒருமணிநேரம் போராடி தீ அணைக்கப்பட்டது. விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Discussion about this post