ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட பெண் திடீரென தற்கொலை செய்து கொண்டதில் மர்மம் இருப்பதாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சித்தூர் மாவட்டத்திலுள்ள ரெட்லபள்ளி கிராமத்தைச் சேர்ந்த சந்தனா என்ற பெண்ணும், அதே கிராமத்தில் வசிக்கும் வேற்று மதத்தைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ் என்ற இளைஞரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். தொடக்கம் முதலே சந்தனா-ஸ்ரீநிவாஸ் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த பெண்ணின் பெற்றோர், ஊர் பெரியவர்களிடம் பேசி இருவரையும் பிரித்து தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில், சந்தனா அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். சந்தனாவின் உடலை அவர்களது பெற்றோர் அவசர அவசரமாக அருகிலுள்ள காலியிடத்தில் எரித்து ஈமச்சடங்கினை முடித்தனர். சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர், சந்தனா கவுரவக் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில், அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தனா இறந்த செய்திக் கேட்ட ஸ்ரீநிவாஸ் மற்றும் அவரது தந்தை தலைமறைவாகிட்ட சூழ்நிலையில், அவர்களையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
Discussion about this post