சேலம் மாவட்டம், ஏற்காடு மலையில் திடீர் என தீப்பற்றி எரிந்தது. இந்த தீயானது அடிவாரத்தில் உள்ள கிராமத்தை சுற்றி பரவி வருவதால் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் ஏற்காடு மலையில் காய்ந்த சருகுகள் தீப்பற்றி எரிகின்றன. ஏற்காடு மலையின் 5வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ கருங்காலி கிராமத்தை சுற்றி பரவி உள்ளது. மலை அடிவார பகுதியில் சுமார் 50 ஏக்கர் வனப்பகுதி தீயில் எரிந்து நாசமானது. தகவலறிந்து வந்த வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினர், தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ பற்றிய இடத்தில் மூங்கில் மரங்கள் அதிக அளவில் இருப்பதால், அவை எரிந்து சேதமடைந்தன. கருங்காலி கிராமத்தை சுற்றிலும் காட்டுத் தீ பரவியதால் அங்குள்ள 50- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பாக அரசு நடுநிலைப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்னர்.
Discussion about this post