சென்னையில் உள்ள ரயில் நிலையங்களில் விற்கப்படும் குடிநீரின் தரம் குறித்து பாதுகாப்பு படை சார்பில் ஆய்வு செய்யப்பட்டது.
ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் விற்கப்படும் ‘ரயில் நீர் ‘எனப்படும் குடிநீர் போலியான முறையில் அரசு முத்திரைகளை மாற்றி விற்பனை செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகத்திற்கு தகவல் வந்தது. இதையடுத்து, குடிநீரை ஆய்வு செய்து, அதன் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும், போலியான குடிநீரை விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரயில்வே பாதுகாப்பு படை தலைமை இயக்குநர் அருண் குமார் உத்தரவிட்டார். இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள கடைகள் மற்றும் ரயில்களில் விற்பனை செய்யப்பட்டு வரும் நீரை ரயில்வே பாதுகாப்பு படையினர் ஆய்வு செய்தனர்.
Discussion about this post