600 க்கு 600 பெற்ற மாணவி நந்தினி, பிறந்தநாள் அன்று பொதுச்செயலாளரை சந்தித்து ஆசி பெற்றார்!

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி கே பழனிசாமி அவர்களின் பிறந்தநாள் விழா நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. அவரது பிறந்தநாள் அன்று திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த, பன்னிரெண்டாம் வகுப்பில் 600க்கு 600 மதிப்பெண்கள் எடுத்த மாணவி நந்தினி நேரில் சென்று ஆசி பெற்றார். நமது நியூஸ் ஜெ தொலைக்காட்சிக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டியில், பொதுச்செயலாளர் அவர்களை அவரது பிறந்தநாள் அன்று சந்தித்து ஆசி பெற்றது மகிழ்ச்சி என்று தெரிவித்தார்.
YouTube video player

Exit mobile version