அரசு பள்ளிகளில் ஏப்ரல் 1ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை

அரசு பள்ளிகளில் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடத்த பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த தமிழக அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசுப்பள்ளிகளில் எல்கேஜி முதல் பிளஸ் 2 வரை மாணவர் சேர்க்கையை ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் நடத்த வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார். மாற்றுச்சான்றிதழ் மற்றும் பிற சான்றிதழ்கள் இல்லாவிட்டாலும் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்தி இருக்கிறார். மாணவர் சேர்க்கையின் விவரங்களை பள்ளிக்கல்வித்துறையின் EMIS இணையதளத்தில் தினசரி பதிவு செய்ய வேண்டும் என்றும் அனைத்து அரசுப்பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Exit mobile version