திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சாலையோரம் வாகனத்தை நிறுத்திவிட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தவரைத் தாக்கி பணம் மற்றும் செல்போனை வழிப்பறி செய்த கொள்ளையர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்
பழனி மடத்துக்குளத்தைச் சேர்ந்த சூர்யகுமார் வேலை நிமிர்த்தமாக கொடைக்கானல் சென்று விட்டு காரில் திரும்பி வந்து கொண்டிருந்தார். பழனி – கொடைக்கானல் சாலையில் வாகனத்தை நிறுத்தி விட்டு ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத சில நபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி 50 ஆயிரம் ரூபாய் மற்றும் செல்போனை கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், ஆரோக்யராஜ், பாண்டி, விஜய், ஆபீப், முசாரப் ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.
Discussion about this post