டெல்லியைச் சுற்றியுள்ள மாநிலங்களில் வைக்கோல் எரிப்பைத் தடுக்க மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் அருண் மிஸ்ரா, தீபக் குப்தா அமர்வு டெல்லி, பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேச மாநிலத் தலைமைச் செயலாளர்களை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது டெல்லி, பஞ்சாப், அரியானா மாநிலத் தலைமைச் செயலாளர்கள் ஆஜராகினர். அப்போது,(gfx) இந்த ஆண்டும் வைக்கோல் எரிப்பு நடைபெறும் எனத் தெரிந்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காதது ஏன்? என அவர்களிடம் நீதிபதி அருண் மிஸ்ரா கேள்வி எழுப்பினார். வைக்கோல் எரிப்பைத் தடுக்க அரசால் முடியாதா என்ன எனவும் கேள்வி எழுப்பினர். கோபுரத்தில் கொலு வீற்றிருந்து ஆட்சிபுரிய வேண்டும் என அதிகாரிகள் நினைப்பதாகவும் நீதிபதி தெரிவித்தார். வைக்கோல் எரிப்பதைத் தடுக்கப் பஞ்சாப், அரியானா மாநில அரசுகள் தவறியுள்ளதாகத் தெரிவித்த நீதிபதிகள், வைக்கோல் எரிப்பைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். வைக்கோலை விலைக்கு வாங்க ஒரு திட்டத்தை உருவாக்குமாறும், அதற்குத் தேவையான நிதி இல்லையென்றால் அரசிடம் கேட்டுப் பெறுமாறும் நீதிபதி தெரிவித்தார். கட்டுப்பாட்டை மீறி இன்னும் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருப்பதாகத் தெரிவித்த நீதிபதி, விதிமுறைகளையும் கட்டுப்பாட்டையும் மீறிய யாரையும் தண்டிக்காமல் விட முடியாது என எச்சரிக்கை விடுத்தார்.
Discussion about this post