கன்னியாகுமரி மாவட்ட கடற்பகுதியில் புயல் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து 4 வது நாளாக மீன்பிடி தொழில் தடைபட்டுள்ள நிலையில், ஆழ்கடலுக்கு சென்ற விசைப்படகுகள் கரை திரும்பி வருகின்றன.
கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் 4 வது நாளாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால், மீனவ குடியிருப்புகள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் பகுதியில் இருந்து 500 க்கும் மேற்பட்ட கட்டுமரங்கள், நாட்டுப்படகுகள் மற்றும் ஐநூறுக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற விசைப்படகுகள் கரை திரும்பி வருகின்றன. இதனால் மீன்பிடி துறைமுகங்கள் வியாபாரமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.
Discussion about this post