ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யவுள்ள நிலையில், வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தையடுத்து ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து, ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது.
வழக்கை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், ஆலையை திறக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது. பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில், ஸ்டெர்லைட் விவகாரத்தில், தங்கள் தரப்பின் விளக்கத்தை கேட்காமல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளது.
Discussion about this post