ஸ்டெர்லைட் வழக்கு: தமிழக அரசு சார்பில் எழுத்துப்பூர்வ வாதம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல்

ஸ்டெர்லைட் தொடர்பான வழக்கில் எழுத்துப்பூர்வ வாதத்தை தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

ஆலையை திறக்க அனுமதி வழங்கிய தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவிற்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தது.மேல் முறையீடு வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பின் தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இந்நிலையில், திங்கள் கிழமைக்குள் மனு தாரர்கள் எழுத்து பூர்வ வாதாங்களை சமர்பிக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், தமிழக அரசு எழுத்து பூர்வ வாதத்தை தாக்கல் செய்துள்ளது. அதில், ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்குவதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ள தமிழக அரசு ஆலையை திறக்க அனுமதி வழங்க கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளது. ஆலையை திறக்கக்கூடாது என்பதே மக்களின் விருப்பம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Exit mobile version