மத்திய சென்னையில் பிரசாரம் மேற்கொண்ட அதிமுக கூட்டணி வேட்பாளர் பாமகவின் சாம் பால், மெட்ரோ ரயில் பயண கட்டணங்களை குறைக்க வலியுறுத்தப்படும் என்று வாக்காளர்களுக்கு உறுதியளித்தார்.
பாமக மத்திய சென்னை வேட்பாளர் சாம் பால் சென்னை அண்ணா நகர் டவர் பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்டவர்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவும் அவரை ஆதரித்து வாக்கு சேகரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சாம்பால், அண்ணாநகர் பகுதியில் குப்பைகளை அகற்றுவதில் தாமதம் இருப்பதாகவும், உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்ததாக தெரிவித்தார். தேர்தலில் வெற்றி பெற்ற பின் அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் கூறினார்.