குடியரசு தினத்தன்று பள்ளிக்கு வராத ஆசிரியர்கள் மீது 17பி விதிப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.போராட்டத்தில் ஈடுபடும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், குடியரசு தினத்தன்று பள்ளிக்கு வராத ஆசிரியர்கள் மீது 17பி விதிப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பணியில் சேராவிட்டால் அந்த பணியிடத்தில் தகுதி உள்ள மற்ற ஒருவர் நியமிக்கப்படுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Discussion about this post