தொடக்கப்பள்ளிகளில் 63.78 சதவீதம் ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை என்றும் பள்ளிக்கல்வித் துறையில் 75 ஆயிரம் ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை என்று புள்ளிவிவரம் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஒருவாரகாலமாக ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும்நிலையில் ஆசிரியர்கள் வருகைப்பதிவு குறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்ககம் சார்பில் புள்ளிவிவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், பள்ளிக்கல்வித் துறையில் 75 ஆயிரம் ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை என்றும், போராட்டத்தில் பங்கேற்ற 80 ஆயிரம் பேரில் 5 ஆயிரம் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 முதல் 12-ம் வகுப்பு வரை 37 சதவீதம் ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை என்று குறிப்பிட்டுள்ள பள்ளிக்கல்வித் துறை இயக்ககம், 96 ஆயிரத்து 207 பேர் அனுமதியின்றி விடுப்பில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
தொடக்கப்பள்ளிகளில் பணியாற்றும் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 836 ஆசிரியர்களில் 50 ஆயிரத்து 288 பேர் பணிக்கு வந்துள்ளதாகவும், 63 புள்ளி 78 சதவீதம் ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை என்றும் தொடக்கக் கல்வி இயக்ககம் குறிப்பிட்டுள்ளது.