திருவாரூர் மாவட்டம் வடுவூர் அருகே நடைபெற்ற மாநில அளவிலான கபடிப் போட்டியில், 50க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று விளையாடினர்.
வடுவூர் அருகே தென்பாதியில், கடந்த 3 நாட்களாக மாநில அளவிலான கபடிப் போட்டிகள் நடைபெற்று வந்தன. ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவாக நடத்தப்பட்ட இந்த போட்டியில், கோவை, திருப்பூர், அறந்தாங்கி, மணப்பாறை, தர்மபுரி, வடுவூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொண்டன. 65 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்தப் போட்டி நடத்தப்பட்டது.
போட்டியின் இறுதிச்சுற்றில் தருமபுரி பெண்கள் அணி மற்றும் வடுவூர் பெண்கள் அணிகள் மோதின. இதில் வடுவூர் அணி முதலிடம் பெற்று கோப்பையை வென்றது. இந்தப் போட்டியினை ஏராளமானோர் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.
Discussion about this post