கிருஷ்ணகிரி உழவர் சந்தை பகுதிகளில் வாக்கு சேகரிக்க வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள தேனீர் கடையில் தேனீர் அருந்துவதுபோல் நடித்து அதனை அருந்தாமல் திருப்பி அனுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அண்மைக் காலங்களில் பொது மக்களிடையே இயல்பாகவும், சாதாரணமாகவும் பழகுவது போல் காட்டிக்கொள்ள ஸ்டாலின் பல்வேறு வகையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறார். அந்த வகையில் இன்று காலை நடைபயிற்சியில் ஈடுபட்ட ஸ்டாலின், கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஆகியோருடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை எதிரே உள்ள உழவர் சந்தை பகுதியில் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
அப்போது செய்தியாளர்கள், ஏராளமான பொதுமக்களும் கூடிய நிலையில் தன்னை சாதாரண மனிதன் போல் காட்டிக் கொள்ள அங்குள்ள சாலையோர தேனீர் கடையில் தேனீர் அருந்துவது போல் நடித்தார். ஒருபுறம் ஸ்டாலின் பொதுமக்களையும், சிறுவர்களையும் அருகில் அழைத்து பேசி வரும்நிலையில் மறுபுறம் அவரது பாதுகாவலர்கள் அருகில் வரும், பொது மக்களையும், பெரியவர்களையும் விரட்டினர். தேனீரை பருகாமல் அதனை திருப்பிக் கொடுத்து விட்டு ஸ்டாலின் அங்கிருந்து புறப்பட்டார்.
Discussion about this post