பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் அவதூறு பிரச்சாரத்தில் ஈடுபடுவதாகவும், தாழ்த்தப்பட்டவர் என்பதால் அவர் மீது பழி சுமத்துவதா என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ஓட்டப்பிடாரம் தொகுதியில் வெற்றி பெற்றவுடன், அப்பகுதி மக்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றித் தரப்படும் என்றார்.
தொடர்ந்து, ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதியம்முத்தூர் பகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியில் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை என்றும், நாட்டு மக்களுக்கு என்ன செய்தோம், என்ன செய்யப் போகிறோம் என்பதை சொல்ல முடியாமல், அதிமுக அரசை திமுக குறை கூறி வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
Discussion about this post