மோடி குறித்து ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு தமிழிசை சவுந்தரராஜன் மறுப்பு

பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் தொடர்ந்து நாட்டு பண் இசைக்கபடுவதில்லை என ஸ்டாலின் கூறியுள்ள குற்றச்சாட்டுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மறுப்பு தெரிவித்துள்ளார். சென்னையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள மெட்ரோ வழித்தடத்தில் பயணம் செய்த அவர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். பிரதமர் மோடி பல மாநிலங்களில் தமிழை பற்றி எடுத்து பேசி உள்ளார் என்றும், திருக்குறளாக இருந்தாலும், தமிழக தலைவர்களாக இருந்தாலும் அதிக அளவில் மதிப்பளிப்பவராக மோடி இருப்பதாகவும் அவர் கூறினார்.

Exit mobile version