பொய் கூறுவதில் நோபல் பரிசு வழங்கினால் ஸ்டாலினுக்குதான் கிடைக்கும்: முதல்வர்

ஆரணி தொகுதி அதிமுக வேட்பாளர் செஞ்சி ஏழுமலையை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்தார்.

வந்தவாசியில் பரப்புரை செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாடும் தமிழகமும் வளர்ச்சி பெற வேண்டுமென்றால் இரட்டை இலை வெற்றி பெற வேண்டும் என பேசினார். இந்தியாவில் அதிகமாக பயிர்காப்பீட்டு தொகை பெற்ற மாநிலமாக தமிழகம் இருப்பதாக கூறிய முதலமைச்சர், வாக்குகளை பெறுவதற்காக ஸ்டாலின் மக்களை ஏமாற்றி வருவதாக குற்றம் சாட்டினார். பொய்க்கு நோபல் பரிசு வழங்கப்பட்டால் அது ஸ்டாலினுக்குதான் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

செய்யாறு பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பங்கேற்ற முதலமைச்சர், எங்கெல்லாம் உபரி நீர் கடலில் கலக்கும் நிலை இருக்கிறதோ அதை தடுத்து தடுப்பனைகள் கட்டப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் தமிழகம் முழுவதும் தடுப்பணைகள் கட்டுவதற்கு ஆய்வு நடைபெறுவதாகவும் எத்தனை ஆயிரம் கோடி செலவானாலும் தடுப்பணைகளை கட்டியே தீருவோம் என முதலமைச்சர் உறுதிபட தெரிவித்தார்.

Exit mobile version