மதுரையில் ஸ்டாலின் பிரசாரத்தில் தொண்டர்கள் கூட்டம் இல்லாததால், களையிழந்தது.
மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனை ஆதரித்து ஸ்டாலின் பிரசாரம் செய்தார். வண்டியூரில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர். கூட்டத்திற்கு திமுக மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் பெரும்பாலானோர் வராததால், இருக்கைகள் காலியாக இருந்தது. இதனால், அதிருப்தி அடைந்த திமுகவினர் செய்வதறியாது திகைத்தனர். மதுரையில் திமுக போட்டியிடாமல், கூட்டணிக்கு ஒதுக்கிய போது, அழகிரிக்கு அஞ்சி திமுக பின்வாங்கியதாக அதிருப்தி எழுந்தது. இந்தநிலையில், வண்டியூரில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக கூட்டணி பிரசார கூட்டத்தில் பெரும்பாலான இருக்கைகள் காலியாகவே இருந்தது. அமர்ந்திருந்தவர்களும், வெயில் கொடுமை தாங்காமல் கலைந்து சென்றனர். இதனால், தனது பேச்சை ஸ்டாலின் அவசரஅவசரமாக முடித்தது, சலசலப்பை ஏற்படுத்தியது.
Discussion about this post