திருவண்ணாமலையில் திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசிய போது தொண்டர்கள் இல்லாததால், காலியான நாற்காலிகளுக்கு மத்தியில் பேசும் நிலை ஏற்பட்டது.
திருவண்ணாமலை – திருக்கோவிலூர் சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் உள்ள மைதானத்தில் திமுக சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட அக்கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தமிழகம் முழுவதும் இருந்து திமுக தொண்டர்கள் அதிகளவில் வருவார்கள் என எதிர்பார்த்து பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், திமுக தலைவர் ஸ்டாலின் பேச ஆரம்பித்த போது, தொண்டர்கள் தொடர்ந்து வெளியேறினர்.
ஒருகட்டத்தில், தொண்டர்கள் இல்லாததால், நாற்காலிகள் காலியாக இருக்கும் சூழல் ஏற்பட்டது. அதையும் பொருட்படுத்தாமல், திமுக தலைவர் ஸ்டாலின் காலி நாற்காலிகளுக்கு மத்தியில் உரையாற்றினார். நிகழ்ச்சியில் தொண்டர்கள் அதிகளவில் கலந்து கொள்ளாதது திமுக தலைவர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post