ஹிட்லரை விட சர்வாதிகாரியாக செயல்படுகிறார் ஸ்டாலின் – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு கழக வெற்றி வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவினை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவர்கள் நமது நியூஸ் ஜெ தொலைக்காட்சிக்குப் பிரத்யேப் பேட்டி ஒன்றினை அளித்தார். அதில் அவர் பேசியது பின்வருமாறு உள்ளது.

ஈரோடு கிழக்கில் திமுகவினர் மக்களை அடைத்துவைத்து அரஜாகத்தில் ஈடுபடுகிறார்கள். நாங்கள் மக்களிடம் சென்று வெற்றிச்சின்னமான இரட்டைஇலைக்கு ஓட்டுப் போடுங்கள் என்று கேட்டால் நாங்கள் உங்களுக்கு ஓட்டுப் போட்டால் எங்களுக்கு வரவேண்டிய முதியோர் பென்சன் போன்றவற்றை நிறுத்திவிடுவோம் என்று மக்களை மிரட்டியுள்ளார்கள்  திமுகவினர். இந்த ஆட்சியில் ஸ்டாலின் ஹிட்லரை விட மோசமான சர்வாதிகாரியாக செயல்படுகிறார். மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளார்கள். அவர்கள் இந்த தேர்தலை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி திமுகவினை வீட்டிற்கு அனுப்பவேண்டும் என்று செய்தியாளர்களிடம் கூறினார் முன்னாள் அமைச்சர் அவர்கள். அவர் பேசிய விரிவான காணொளியின் சுட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

YouTube video player

Exit mobile version