இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுகவின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் ஸ்டாலின் அரசு!

சேலத்தில் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களை திறந்து வைத்து ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டி இருப்பது குறித்தும், இந்த நிகழ்வுகள் எல்லாம் காமா பயில்வானை நினைவுபடுத்துவதாக எதிர்க்கட்சித்தலைவர் பேசியிருப்பது குறித்தும் அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்….

கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அதிமுக ஆட்சியில் அன்றைய முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அடிக்கல்நாட்டிய டபுள் டக்கர் பஸ் ஸ்டாண்டை இப்போது, ரிப்பன் வெட்டி திறந்து வைத்திருக்கிறார் விடியா திமுக அரசின் முதல்வர் ஸ்டாலின்… வழக்கம்போல, அதிமுக அரசின் திட்டத்திற்கு பெரிய்யய ஸ்டிக்கரா ஒட்டியிருக்கிறார்.

மக்கள் பணி செய்யவே நேரம் போதவில்லை , மக்கள் விரோதிகளைப் பற்றி பேச நேரமே இல்லை என்று தனது திருவாய் மலர்ந்திருக்கிறார் முதல்வர். திமுக ஆட்சியில் நடக்கும் மக்கள் விரோத பிரச்சனைகள் குறித்தும், அமைச்சர்கள் செய்யும் உள்ளடி வேலைகள் குறித்தும், ஊழல்கள் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் பதிலளிக்க முடியாமல், அதற்கு திராணியில்லாமல், கேட்ட கேள்விக்கு தெறித்து ஓடிவதைப் பார்க்கும்போது, புல்தடுக்கி பயில்வான் தான் நினைவுக்கு வருவதாக கடுமையாகவே சாடி இருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி..

நேற்று சேலத்தில் திறக்கப்பட்ட மாநகரப் பேருந்து நிலையம் சில மணி நேரத்திலேயே இருளில் மூழ்கியது… இதுதான் உங்க விடியாலாங்க என்று தலையில் அடித்தபடியே சென்றார்கள் சேலத்து மக்கள்… ஊரில் திருவிழா மார்பில் சந்தனம் என்று கொஞ்சம் கூட கூச்சநாச்சம் இன்றி அதிமுகவின் திட்டங்களை திறந்துவைத்துவிட்டு வாயில் வடை சுட்டுக்கொண்டிருக்கிறார் ஸ்டாலின்…

திரும்பிய இடமெல்லாம்,திமுகவின் தில்லுமுல்லுகள்…. காணும் இடமெல்லாம் மக்களுக்கு கஷ்டங்கள்… நாள் ஆக ஆக வெளுக்கும் திமுகவின் சாயம் …. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் ஒவ்வொரு துறையிலும் பஞ்சாயத்துக்கள் என்று தூக்கம் தொலைத்த ஸ்டாலினின் ஆட்சியில் மக்களும் நிம்மதியை தொலைத்து நிற்கின்றனர்…

ஆக, அதிமுக தொடங்கிவைத்த திட்டங்களை நிறுத்தி வைத்துவிட்டு, முடிவடைந்த திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி திறந்துவைத்துக்கொண்டிருக்கும் ஸ்டாலினைத்தான் புல்தடுக்கி பயின்வான் என்று குறிப்பிடுகிறாரா எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே பழனிசாமி? என்பதை மக்களே தீர்மானித்துக்கொள்ளட்டும்.

Exit mobile version