ஸ்டாலினுக்கு பிரதமர் கனவா? செல்லாக் காசாக மாறிய எதிர்க்கட்சிகள் மீட்டிங்!

உள்ளூரில் ஓணான் பிடிக்கத் தெரியாதவன், வெளியூர் சென்று உடும்புப் பிடித்தானாம் என்ற சொலவடை பெரும்பாலான கிராமங்களில் புழக்கத்தில் உள்ள ஒன்று. அப்படி உள்ளூரில் ஒன்றும் செய்ய முடியாமல் வெளியூர் சென்று தன் பலத்தினை காட்ட கிளம்பியிருக்கிறார் விடியா அரசின் முதல்வர் ஸ்டாலின். வந்தவரை வரவேற்கும் விதமாக டிவிட்டரில் கோ பேக் ஸ்டாலின் என்கிற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகிய வண்ணம் உள்ளது.

நம்மால் குண்டிச்சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்டுவது கஷ்டமாயிற்றே என்பதை ஸ்டாலின் உணர்ந்தாரா இல்லையா என்று தெரியவில்லை. அதைவிட்டு, வடக்கு சென்று தன்னை பெரிய அரசியல்வாதியாக காட்டிக்கொண்டு ஆலோசனைகள் வழங்க புறப்பட்டிருக்கிறார். இங்கு ஸ்டாலினுக்கே ஆலோசனை கொடுப்பதற்கு பதினோறு பேரு கொண்ட குழு இருப்பதாக அரசல் புரசலாக சொல்லப்படுகிறது. மேலும் முதல்வருக்கு காகிதத்தில் எழுதியிருப்பதை படிக்கும்போதே ஏகபோக நாக் குளறல் ஏற்படும். இப்போது அங்கு போய் என்ன பேசப்போகிறோரா?

இந்தக் கூட்டத்தை முதலில் கூட்ட வேண்டும் என்று எண்ணிய சந்திர சேகரராவே, இதில் கலந்து கொள்ளவில்லை என்பது நகைமுரண். அதனைத் தொடர்ந்து இந்த எதிர்க்கட்சிக்குள் ஆளுக்கொரு முரண் உள்ளது. முக்கியமாக திரிணாமூல் காங்கிரஸிற்கும் இந்திய தேசிய காங்கிரஸிற்கும் முதலில் இருந்தே ஆகாது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் அனைத்துக் கட்சிகளும் சேர்வது என்பது முயற்கொம்பே. இந்த லட்சணத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் ஆசை வந்துவிட்டதா என்று தெரியவில்லை. மேடைகளில் பீஹார் மக்களை தரைக்குறைவாக ஸ்டாலின் பேசியும், அவரது கட்சியினர் பேசியும் வந்துள்ள நிலையில் இன்றைக்கு தன் அரசியல் ஆதயத்திற்காக பிழைப்பு வாத அரசியல் செய்ய பீஹாரை நோக்கியே சென்று இருக்கிறார் இந்த டெல்டா நாயகன் என்று அரசியல் விமர்சகர்கள் பேசிவருகிறார்கள்.

 

Exit mobile version