பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு நாளைத் தொடங்குகிறது..மாணவர்கள் ஆப்சண்ட் ஆகாமல் வருவதற்கு பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்காமா?

தமிழகம் முழுவதும் நாளை ஏப்ரல் 6 ஆம் தேதி பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வானது தொடங்க உள்ளது. கடந்த திங்கள் கிழமையுடன் பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவடைந்த நிலையில் இன்றுடன் பதினொன்றாம் வகுப்புத் தேர்வுகள் முடிடைய உள்ளன.

இந்தப் பத்தாம் வகுப்புத் தேர்வினை ஒன்பது லட்சத்து 22 ஆயிரத்து 725 மாணவர்கள் எழுத உள்ளார்கள். ஏற்கனவே பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுதேர்வின் போது ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் தமிழ் முதல் தாள் தேர்விற்கு ஆப்சண்ட் ஆகியிருந்தது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இது பள்ளிக்கல்வித் துறையின் மீது விழுந்த கறையாக அரசியல் நோக்கர்கள் கூறிவந்தார்கள். மேலும் ஏற்கனவே இந்த பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வின்போது 25000 மாணவர்கள் தேர்வு எழுதவரவில்லை. பிறகு அதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு செய்முறைத் தேர்வு முடிக்கப்பட்டுவிட்டது. இருப்பினும் நாளை நடைபெற இருக்கும் பத்தாம் வகுப்பு தமிழ்தாள் தேர்வில் எத்தனை மாணவர்கள் ஆப்சண்ட் ஆகப் போகிறார்களோ என்று பொது மக்களிடையே பீதி கிளம்பியுள்ளது. பள்ளிக்கல்வித்துறை தொடர்ந்து இதுபோலான காரியங்கள் நடைபெற்று வருவதை கண்டும் காணாமல் இருக்கிறது. இதற்கு தக்க நடவடிக்கையை பள்ளிக்கல்வித்துறை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வற்புறுத்தி வருகிறார்கள்.

Exit mobile version