பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வு 25,000 மாணவர்கள் மற்றும் மாணவிகள் பங்கேற்கவில்லை..!

10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஏப்.6-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை நடக்க உள்ளது. இத்தேர்வை எழுத 9.38 லட்சம் மாணவ, மாணவிகள் பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே, பொதுத்தேர்வு எழுத உள்ள 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் பாட செய்முறை தேர்வு அந்தந்த பள்ளிகளில் மார்ச் 20 முதல் 28-ம் தேதி வரை நடத்தி முடிக்கவேண்டும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்வுகளில் 25,000 மாணவ, மாணவிகள் பங்கேற்கவில்லை என்று அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தேர்வுத்துறை மார்ச் 31 வரை இந்த செய்முறைத் தேர்வினை நடத்தி பங்கேற்காத மாணவர்களை தேர்வு எழுத வைக்கும்படி உத்தரவினை விடுத்துள்ளது. பள்ளி கல்வித் துறை அதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள் போன்றவர்களின் மெத்தனத்தால் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. ஏற்கனவே பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வினை ஐம்பாதாயிரத்திரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் எழுத வரவில்லை என்பதே ஒரு பக்கம் அதிர்ச்சியாக இருந்தது. தற்போது இந்த செய்தி மேலும் அதிர்ச்சியளிக்கக் கூடிய ஒன்றாக உள்ளது என பொதுமக்கள் கூறி வருகிறார்கள்.

Exit mobile version