விடியா திமுக அரசின் நிர்வாக திறமையின்மையால், திறமையான காவல் அதிகாரிகள் தற்கொலை செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி கடுமையாக சாடியுள்ளார்.
டெல்லியில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு வருகை தந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு முன்னாள் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, பொன்முடி வழக்கில் அமலாக்கத்துறை காலதாமதமாக வந்துள்ளது என தெரிவித்தார்.நாடாளுமன்ற தேர்தலை முன்வைத்தே மகளிர் உரிமைத்தொகை அறிவிப்பை ஸ்டாலின் வெளியிட்டுள்ளார் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டினார்.விடியா திமுக ஆட்சி கலைந்துவிடுமோ என்ற அச்சத்திலேயே செந்தில்பாலாஜியை மருத்துவமனை வரை சென்று ஸ்டாலின் சந்தித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடுமையாக சாடினார்.விடியா திமுக அரசின் நிர்வாக திறமையின்மையால், திறமையான காவல் அதிகாரிகள் தற்கொலை செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம் சாட்டினார் .விடியா ஆட்சியில் ஜவுளித்தொழில் நசுங்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, ஜவுளி உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளை விடியா திமுக அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.