சாதனை என்றால் உலக சாதனை மட்டுமல்ல தற்போது உள்ள கால சூழ்நிலையில் வாழ்கையே பெரும் போராட்டமாக உள்ளது. அதில் வெற்றி பெறுவதே ஓர் பெரிய சாதனை தான் என்பதே நிதர்சனமான உண்மை. அந்த வகையில் பலர் வாழ்க்கை என்னும் போராட்டதில் போராடிக்கொண்டே தான் உள்ளனர். அப்படிப்பட்ட போராட்டதில் வெற்றி பெற்றவர் தான் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த கருப்பசாமி அவர்கள். இங்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான தேடல் இருக்கும். அந்த தேடலில் வழியே பல விஷயங்களை நாம் கற்றுகொண்டு வருகிறோம். அப்படி தேடிய தேடல் தான் கருப்பசாமி என்னும் அசத்தல் மனிதர். இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் காலையில் யோகா மாஸ்டராகவும், மாலையில் டீ மாஸ்டராகவும் பரபரப்பாக தன்னை இயக்கி கொள்ளும் மனிதர் தன் இவர். கலையிலும், கடையிலும் தனிலை மறவாத தன்னம்பிக்கையால் அசத்தி வருபவர் தான் கருப்பசாமி. யார் இந்த கருப்பசாமி? என்ற கேள்விகளுக்கெல்லம் விடை செல்லும் பயணமே அசத்தல் மன்னம் கருப்பசாமியின் வாழ்வியல்.
முடியும் வரை முயற்சி செய்:
ஸ்ரீவில்லுப்புதூர் அருகே இடையபொட்டல் தெருவில் டீ கடை வைத்து இருக்கிறார், டீ கடை ராஜா நாங்க என்ற வரிகளுக்கு ஒப்ப வாழ்ந்து வருகிறார். இவரின் வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனையை சரி செய்ய பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் கையில் எடுத்த ஆயுதம் தான் யோகாகலை. இவர் யோகாசனத்தை கற்றுக்கொண்டு அங்குள்ள குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கும் ஆசிரியராகவும் இருந்தார். இவரிடம் யோகா கற்ற மாணவ மாணவிகள் எல்லாம் தேசிய மற்றும் மாநில போட்டிகளில் மற்றுமின்றி சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்றுச் சாதனை படைத்தும் வருகின்றனர். இதனை பற்றி கருப்பசாமி அவர்கள் கூறும் போது, நான் பள்ளிப் படிக்கும் பருவத்தில் இருந்தே தற்காப்புகலை, உடற்பயிற்சி, யோக போன்ற கலைகளை கற்றுவந்து உள்ளார். பிறகு இவரும் இவரது நண்பர்களும் சேர்ந்து ஒரு குழு ஒன்றை உருவாக்கி அனைவருக்கும் உடற்பயிற்சி வகுப்புகள் நடத்தி வந்து உள்ளனர். இவர் அவரது தந்தை வைத்து இருந்த டீ கடையில் மாலை நேரம் அவருக்கு உறுதுணையாக இருந்து உள்ளார். மேலும் இவருக்கு 2006 ஆம் ஆண்டு ஏற்பட்ட மூச்சுபிரச்சனை காரணமாகவும் தூக்கமின்னமை மற்றும் மன அழுத்தம் காரணமாகவும் இவர் அவரது மனைவியின் ஆலோசனைப்படி தனது 31-வது வயதில் அழகர் என்பவரிடம் யோகா பயிற்சி பெற்றுள்ளார். அதற்கு பின்புதான் அவருக்கு இருந்த மூச்சி பிரச்சனை சரியானது என்றார்.
அதன் பின் தொடர்ந்து யோகா பயிற்சி செய்து வந்து உள்ளார். ஒருபுறம் டீ கடையும் நடத்திக்கொண்டு மறுபுறம் யோகா பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வந்து உள்ளார். இவர் சில மாதங்களுக்கு முன்புதான் பாரதிதாசன் பல்கழைகழகத்தில் யோகா ஆசிரியருக்கான பட்டயபடிப்பு பட்டம் பெற்றுள்ளார். மேலும் அங்குள்ள குழந்தைகளுக்கும், மாணவ மாணவிகளுக்கும் யோக பயிற்சி வகுப்புகளை இலவசமாக எடுத்துவருகிறார். 30-பதிற்க்கும் மேற்பட்டவர்கள் இந்த வகுப்பில் பயிற்சி பெற்று வருகின்றனர். காலையில் டீ கடை ராஜவாகவும் மாலையில் யோகா ஆசிரியராகவும் தன்னை தானே முழுநேரமும் பிசியாகவே வைத்து வருகிறார். ஒருவருக்கு காலமும் சூழ்நிலையும் எப்படி வேண்டுமானாலும் மாறலாம் அதற்கு ஏற்றது போலவே நம்மை நாமே ஒவ்வொரு நாளும் செதுக்கிக்கொள்ள வேண்டும்.