கன மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்வரத்து அதிகரிக்கும் நிலையில், நீர் வெளியேற்றமும் அதிகரிக்கப்பட்டு உள்ளதால், ஸ்ரீபெரும்புதூர் – குன்றத்தூர் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது
புரெவி புயல் எதிரொலியாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து ஏரியின் உபரி நீர் திறப்பு வினாடிக்கு 2 ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஸ்ரீபெரும்புதூர் – குன்றத்தூர் சாலை முற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களையும், அரசு பேருந்துகளையும், வாகன ஓட்டிகளையும் காவல்துறையினர் திருப்பி அனுப்பினர். ஏரியில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கபட்டுள்ளதால், அடையாறு ஆற்றங்கரையில் அதிகளவில் நீர் செல்கிறது.தற்போது ஏரியில் இருந்து நீர் திறப்பு அதிகரித்து வருவதால், அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படாதவாறு, ஏரியின் நீர் மட்டத்தை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.
Discussion about this post