பரபரப்பான சூழலில் இலங்கை நாடாளுமன்றம் இன்று மதியம் கூடுகிறது. தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
ஈஸ்டர் பண்டிகையின் போது இலங்கையில் 8 இடங்களில் தொடர் குண்டுவெடிப்புகள் நடந்தன. இதில் 310 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
பரபரப்பான சூழலில் இன்று மதியம் இலங்கை நாடாளுமன்றம் கூடுகிறது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் ராஜபக்ச ஆகியோர் கலந்து கொள்கின்றனர். நாட்டில் பாதுகாப்பை பலப்படுத்துதல் மற்றும் தீவிரவாதத்திற்கு பதிலடி கொடுப்பது குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது. குண்டு வெடிப்பில் பலியானோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இலங்கையில் தேசிய துக்க தினம் அனுசரிக்கப்படுகிறது.