ஈழப்போரின் போது 11 இலங்கைத் தமிழர்களை கடத்தி கொல்லப்பட்ட விவகாரத்தில் இலங்கை முப்படை தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இலங்கையில் கடந்த 2008 முதல் 2009 ஆம் ஆண்டு வரை தமிழ் ஈழப்போர் நடைபெற்றது. அப்போது ராணுவ தலைமை அதிகாரியான லெப்தினன் கமாண்டர் சந்தன பிரசாத் 11 இலங்கை தமிழர்களை கடத்தி கொலை செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் அவரை வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல உதவியதாக இலங்கை முப்படை தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன மீதும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கு கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் வழக்கு விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பு தராததை அடுத்து ரவீந்திர விஜேகுணரத்ன கைது செய்யப்பட்டார். வழக்கு விசாரணை வரும் 5-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ரவீந்திரை புகைப்படம் பிடிக்க முயன்ற செய்தியாளர்கள் தாக்கப்பட்டதால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Discussion about this post