60 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதியுதவி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் கடந்த 8 ஆம் தேதி தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இதனிடையே சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதியுதவி வழங்கப்படும் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வகுத்துத் தந்த பாதையில் உறுதியாக நடக்கும் அரசு, ஏழை எளிய மக்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு, வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.
ரூ.2000 சிறப்பு பரிசு – பயனாளிகள் விபரம்
*கஜா புயல், வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்கள்,
*விவசாய தொழிலாளர்கள், நகர்புற ஏழைகள் பயன்பெறுவர்
*பட்டாசு தொழிலாளர்கள், மீன்பிடி தொழிலாளர்கள்,
*விசைத்தறி தொழிலாளர்கள், கைத்தறி தொழிலாளர்கள் பயன்பெறுவர்
*கட்டுமான தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள்,
*மரம் ஏறும் தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள் பயன்பெறுவர்
*காலணி மற்றும் தோல்பொருட்கள் தயாரிக்கும் தொழிலாளர்கள்,
*மண்பாண்ட தொழிலாளர்கள், கைவினைஞர்கள் பயன்பெறுவர்
*கிராமத்தில் வாழும் சுமார் 35 லட்சம் ஏழை குடும்பங்கள்,
*நகரத்தில் வாழும் சுமார் 25 லட்சம் ஏழை குடும்பங்கள் பயன்பெறுவர்
ஒட்டுமொத்தமாக வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் சுமார் 60 லட்சம் தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள்,இதற்காக பட்ஜெட்டில் ரூ.1200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Discussion about this post