இலங்கையின் பல்வேறு இடங்களில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் சிக்கி உயிரிழந்தவர்களுக்காக பீகார் மாநிலம் கயாவில் புத்த துறவிகள் சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டனர்.
இலங்கையில் ஈஸ்டர் கொண்டாட்டத்தில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் ஈடுபட்டிருந்தபோது, தேவாலயங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 290 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த குண்டுவெடிப்பிற்கு உலக நாடுகள் அனைத்து கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களும் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கையில் உயிரிழந்தவர்களுக்காக பீகார் மாநிலம் கயாவின் மகாபோதி கோயிலில் புத்தத்துறவிகள் இணைந்து சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். கைகளில் விளக்குகளை ஏந்தி ஊர்வலமாக வந்த துறவிகள், அந்த விளக்குகளை கொண்டு பிரார்த்தனை மேற்கொண்டனர்.