ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், மார்கழி மாதப்பிறப்பை ஒட்டி, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திராளான பக்தர்கள் கலந்துக்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலானது, மகாலட்சுமியின் அம்சமாகிய ஸ்ரீ ஆண்டாள், மானிடப் பெண்ணாக அவதரித்து இறைவனுக்காக திருப்பாவை பாடி, பாமாலை சூடியது மட்டுமில்லாமல், பூமாலை சூட்டி இறைவனை அடைந்த இடமாகும். எனவே, ஸ்ரீவில்லிபுத்தூரில் மார்கழி மாதப்பிறப்பு ஒவ்வொரு வருடமும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். மேலும், இக்கோவிலில், சூரிய பகவான் எந்த நேரத்தில் தனுர் ராசிக்கு பிரவேசிக்கிறாரோ, அந்த நேரத்திலேயே மார்கழி மாதப்பிறப்பு கொண்டாடப்படுவது தனிச்சிறப்பாகும். அதனடிப்படையில், நேற்று இரவு முதல் மார்கழி மாதப்பிறப்பு நிகழ்ச்சியானது வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. மார்கழி மாதத்தில் திருமணமாகாத கன்னிப்பெண்கள், விரதமிருந்து, இறைவனை வழிப்பட்டால், திருமணம் நடைபெறும் என்பதும் ஐதீகம். மார்கழி மாதப்பிறப்பு சிறப்பு பூஜையில், திராளான பக்தர்கள் கலந்துக்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Discussion about this post