தமிழகத்தில் செயல்படுத்தப்பட உள்ள சுகாதார திட்டங்கள்: சிறப்பு தொகுப்பு

மத்திய அரசுடன் தமிழக அரசு இணைந்து உலக வங்கியுடன் ஆயிரத்து 987 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், தமிழகத்தில் செயல்படுத்தப்பட உள்ள சுகாதார திட்டங்கள் குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்…

சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், பல திட்டங்களை செயல்படுத்தவும் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்தநிலையில், தமிழகத்தில், ஆம்புலன்ஸ் வசதியை நவீனப்படுத்தவும், குழந்தை இறப்பை தவிர்க்கும் விதமாகவும், தீர்க்க முடியாத நோய்களை தடுக்கவும், மத்திய அரசுடன் தமிழக அரசும் இணைந்து ஆயிரத்து 987 கோடி ரூபாய் மதிப்பில் கடனுதவி ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக தமிழக அரசு, உலக வங்கியுடன் பெற்ற கடனுதவி மூலம் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்மூலம் கடந்த 2005 ஆம் ஆண்டு மகப்பேறு இறப்பின் எண்ணிக்கை 90 ஆக இருந்த நிலையில், கடந்த 2015-16 காலக்கட்டத்தில் 62 ஆக குறைந்து தற்போது, 30 லிருந்து 20 என வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில், நிதி ஆயோக் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், சுகாதாரதிட்டத்தை மேம்படுத்துவதிலும், செயல்படுத்துவதிலும் தமிழகம் முன்னிலை பிடித்தது. வழங்கப்பட்டுள்ள கடனுதவியை கொண்டு தமிழகம் சிறப்பான முறையில் சுகாதாரத்தை மேம்படுத்து வருவதாகவும்,குறிப்பிடதக்க மாற்றங்களை நிகழ்த்தி, வளர்ச்சி கண்டு வருவதாகவும் அதனாலேயே கடனுதவி அளிக்கப்பட்டு வருவதாக உலக வங்கி தரப்பில் காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வழங்கப்பட உள்ள கடனுதவியை கொண்டு சுகாதார வழிமுறைகள், மற்றும் நெறி முறைகளை மேம்படுத்தவும், மருத்துவத்தில் ஆரம்ப நிலை, மற்றும் இரண்டாம் நிலையில், தமிழகம் தன்னிறைவு பெற்ற மாநிலமாக திகழ்வதற்கும் வழி வகை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Exit mobile version