சென்னை நேரு உள்விளையாட்டரங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு சர்வதேச ஒலிம்பிக் கால்பந்து போட்டிகள் தொடங்கியது.
11 நாடுகளைச் சேர்ந்த 120க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றனர். மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஒலிம்பிக் கால்பந்து போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த பிளாட்டினி மாறன், நித்திலன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதன் துவக்க நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள், மத்திய அரசு அதிகாரிகள் பங்கேற்று உரை நிகழ்த்தினர். தமிழகத்திலிருந்து இசையமைப்பாளர் இளையராஜா, ஆர்.ஜே பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா இறைவனின் படைப்பில் அனைவரும் சமமானவர்கள் என்றும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற ஏற்றத்தாழ்வு இல்லை என்றும் பேசினார். மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஒலிம்பிக் போட்டிகள் இந்தியாவில் முதன்முறையாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.