ஆங்கிலப் புத்தாண்டு தினத்தையொட்டி குமரி மாவட்டம் தோவாளையில் சிறப்பு மலர் சந்தை நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பகுதியில் அமைந்துள்ள மலர் சந்தை மிகவும் புகழ் பெற்றது. இங்கு தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் பூக்கள் இறக்குமதியாகிறது. இங்கிருந்து கேரளா, கர்நாடகா மாநிலங்கள், வெளிநாடுகலுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் நாளை ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பதையொட்டி தோவாளையில் சிறப்பு மலர் சந்தை நடைபெற்றது. புத்தாண்டு காரணமாக வெளியூர் வியாபாரிகளும் பொதுமக்களும் போட்டி போட்டு அதிகளவில் பூக்கள் வாங்கி சென்றனர். இதனால் பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்தது. மல்லிகை 3,500 ரூபாய்க்கு, பிச்சி 2 ஆயிரத்திற்கும்,கனகாம்பரம் ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டது. சில மாதங்களாக விலை வீழ்ச்சியை சந்தித்து வந்த பூக்கள் விலை பல மடங்கு உயர்ந்ததால் பூ வியாபாரிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post