அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு நீதிமன்றங்களை ஏற்படுத்தலாம் – ஐகோர்ட் கிளை!

கஞ்சா விற்பனை செய்த வழக்குகளில் ஜாமீன் கோரிய மனுக்களை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி புகழேந்தி விசாரித்தார். இதில் 3 மாதங்களில் 10 ஆயிரத்து 673 வழக்குகள் பதியப்பட்டு, 149.43 டன் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை பாதுகாப்பது தொடர்பாக, போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்திற்கும், காவல் நிலையத்திற்குமான தூரம் குறைவாக இருக்க வேண்டும் என்றும், அப்போதுதான் போலீசால் வழக்கை சரியாக தொடரமுடியும் என்றும் நீதிபதி புகழேந்தி தெரிவித்தார். மேலும் போதைப் பொருள் தடுப்பு கூடுதல் சிறப்பு நீதிமன்றங்களை அனைத்து மாவட்டங்களிலும் ஏற்படுத்த வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.

Exit mobile version