எதிர்க்கட்சித் தலைவர் கவன ஈர்ப்புத் தீர்மானம்.. கொரோனா தொற்றுப் பரவலை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?

தமிழகத்தைப் பொறுத்தவரை கொரோனாத் தொற்றானது மீண்டும் படையெடுக்கத் தொடங்கியுள்ளது. இதனையொட்டி இன்று சட்டபேரவையில் சிறப்பு கவனயீர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தார் எதிர்க்கட்சித் தலைவர். அதில் உரையாற்றிய எடப்பாடி கே பழனிசாமி அவர்கள்,  நாடு முழுவதும் உருமாறிய கொரோனாத் தொற்றானது வேகமாக பரவிவருகிறது. நேற்றைய புள்ளிவிவரத்தின்படி தமிழகத்தின் கொரோனாத் தொற்று 400 பேருக்கும், இந்திய அளவில் 5000 பேருக்கும் பரவியுள்ளதை சுட்டிக்காட்டினார். மேலும் இந்தத் தொற்று கேராளாவில் அதிக அளவில் பரவியிருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

இதனையொட்டி சுகாதாரத்துறை சரியான நடவடிக்கையும் முறையான பாதுகாப்பையும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் அரசின் கவனத்தினை ஈர்க்கும் வகையில் உரையாற்றினார். மேலும் சுகாதாரத்துறை அமைச்சர் வெறுமனே முகக்கவசம் அணிந்துகொள்ளுங்கள் என்று மட்டும் அறிவித்துள்ளார். ஆனால் கட்டுப்படுத்த துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் என்று சட்டபேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version