மக்களவை சபாநாயகர் பதவிக்கு போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி தனது ஆதரவை தெரிவித்துள்ளது.
17வது மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட அனைவரும் கடந்த இரு தினங்களாக முறைப்படி எம்.பிக்களாக பதவியேற்றுக்கொண்டனர். இவர்களுக்கு இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனையடுத்து மக்களவைக்கான புதிய சபாநாயகரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ராஜஸ்தானை சேர்ந்த ஓம் பிர்லா போட்டியிடுகிறார். மக்களவையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 353 உறுப்பினர்கள் இருப்பதால் ஓம் பிர்லாவின் வெற்றி உறுதியாகியிருப்பதாகவே கருதப்படுகிறது. இந்தநிலையில் ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியும் தனது ஆதரவை தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் அதிர் ரஞ்சன் சௌத்திரி இந்த தகவலை தெரிவித்தார். இருப்பினும் மக்களவை துணை தலைவர் பதவிக்கான தேர்தலில் காங்கிரசின் நிலைப்பாடு குறித்து அவர் ஏதும் கூறவில்லை.
Discussion about this post