கடந்த ஆண்டு ஜூலை 11அம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்டத் தீர்மானங்கள் செல்லும் என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. அதனையொட்டி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவு ஒன்றினை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அந்தப் பதிவு பின்வருமாறு உள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவும், கழக இடைக்கால பொதுச்செயலாளராக அண்ணன் திரு. எடப்பாடியார்அவர்கள் தேர்வு செய்யப்பட்டதும் செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு, கழகத்தின் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும், எனக்கும் மாண்புமிகு அம்மா அவர்களின் பிறந்த நாள் பரிசாக கிடைத்திருப்பது எல்லையில்லா மகிழ்ச்சியை தந்துள்ளது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வழியில் கழகத்தை கட்டிக்காக்கவும், “ஏழை எளிய மக்களுக்காக எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் இந்த இயக்கம் தொடர்ந்து பாடுபடும்” என்ற அவர்களின் வாழ்நாள் கனவையும் நிறைவேற்ற மாண்புமிகு அண்ணன் திரு. எடப்பாடியார் அவர்கள் தலைமையில் அணி திரள்வோம்! வென்று காட்டுவோம்!
கடந்த ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவும், கழக இடைக்கால பொதுச்செயலாளராக அண்ணன் திரு. #எடப்பாடியார் அவர்கள் தேர்வு செய்யப்பட்டதும் செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு, கழகத்தின் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும், எனக்கும் மாண்புமிகு #அம்மா அவர்களின் பிறந்த நாள் பரிசாக (1/3)
— SP Velumani (@SPVelumanicbe) February 23, 2023