எதிர்க்கட்சி கொறடா எஸ்பி வேலுமணி கவன ஈர்ப்புத் தீர்மானம்.. தொண்டமுத்தூர் மலைப்பகுதியில் பற்றியெரியும் காட்டுத்தீ விவகாரம்..!

கோவை மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டி உள்ள தொண்டாமுத்தூர் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை விரைவாக அணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி கொறடா எஸ் பி வேலுமணி தெரிவித்துள்ளார்.

கவனயீர்ப்பு தீர்மானத்தில் பேசிய எதிர்க்கட்சி கொறடா எஸ்பி வேலுமணி கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள தொண்டாமுத்தூர் தொகுதியில் உள்ள மதுக்கரை தட்சணபதி பெருமாள் கோவில் மலைப்பகுதிகளில் கடந்த 16ஆம் தேதி காட்டுத்தீ பரவி கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மதுக்கரை விமானப்படை வீரர்கள் சேர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது தீ கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தீ விபத்தினால் மலைப்பகுதியில் உள்ள மரங்கள் வனவிலங்குகள் மலைவாழ் மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். தீ விபத்து ஏற்பட்டவுடன் இதை அணைக்கும் முயற்சியில் இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டிய எதிர்க்கட்சி கொறடா எஸ்பி வேலுமணி, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து இருந்தால் தீயை கட்டுப்படுத்தி இருக்கலாம். அடுத்த மாதம் மே மாதம் என்பதால் அதிகமான கோடை வெயில் இருக்கும். எனவே இப்பகுதிகளில் விழிப்புடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

Exit mobile version